இரவு, தெரு, விளக்கு, மருந்துக்கடை.. - அலெக்ஸாண்டர் ப்ளாக்
Artist: René Magritte |
இரவு, தெரு, விளக்கு, மருந்துக்கடை
பின் மங்கிய அர்த்தமற்ற வெளிச்சம்.
இன்னுமொரு கால் நூற்றாண்டுகள் வாழ்ந்தாலும்-
எதுவும் மாறப்போவதுமில்லை. வெளியேற வழியுமில்லை.
நீ இறப்பாய் பிறகு முதலில் இருந்து தொடங்குவாய்,
இது மீண்டும் மீண்டும் நடக்கும் ஏற்கனவே நிகழ்ந்ததைப் போலவே:
இரவு, கால்வாய்களில் குளிர்ந்த சிற்றலைகள்,
மருந்துக்கடை, தெரு, விளக்கு.
Comments
Post a Comment