ஒளி மனிதன்
Artist: Kawase Hasui |
மேலே சில்லுச்சில்லாக நட்சத்திரங்கள்
பூமியிலேயே கட்டக்கடைசியான ஆள் என்ற நினைப்பில்
தன் கரங்களையே தலையணையாக்கி
மணலில் அயர்ந்திருக்கிறான் ஒருவன்
காற்றுக்கும் அலைகளுக்கும் குறைவேயில்லை
ஆனாலும் ஒரு நிச்சலனம்
சட்டென்று அவன் எழுந்து உட்கார
ஒட்டுமொத்த அண்ட சராசரமும்
அமர்ந்திருக்கிறது தேநீர் மேசையின் எதிர்புறத்தில்
மொழியின்றி
பேச்சைத் துறந்து
என்னவோ பேசிக்கொள்கிறார்கள் இருவரும்
ஓரிரு நிமிடங்கள் நீள்கின்றது அந்த ரகசிய அமர்வு
பின் கடற்கரை ஒரு மெத்தை என்றாகச்
சோர்ந்து சுருண்டு தனக்கு வெளியே படுக்கத்துவங்குகிறான்
மேலே
அங்கொன்று இங்கொன்று
பின் அங்கு என
அச்சு அசலாய்
மானுட உருவில்
ஓர் உடுத்தொகுதி.
**
நன்றி : சொல்வனம் இணைய இதழ்
Comments
Post a Comment