பிரிவு
Artist: Quint Buchholz |
பூங்காவினுள் சட்டென்று நுழைகிறது ஒரு காதல் ஜோடி.
அவன் அவள் கைகளை இறுகப் பற்றியிருக்கிறான்.
எரிகற்கள் மண்ணில் கோடிழுத்து செல்வதுபோல் அவ்வப்போது
தோள்பட்டைகள் உரசிக்கொள்கின்றன.
இருவரும் பறந்து வந்து ஒரிடத்தில் அமர்கிறார்கள்.
பேசத் தொடங்குகிறார்கள்.
இந்தக் கணம் முந்தைய கணத்திடம் எதையோ சொல்ல முயல்வதைப் போல
அவள் அவனிடம் என்னவோ சொல்கிறாள்.
ஒரு நிமிடம்தான்.
அவள் அவனிடம் என்னவோ சொல்கிறாள்.
ஒரு நிமிடம்தான்.
சாலையில் வாகனங்களால் நகர முடியவில்லை.
பல்லாயிரக்கணக்கான இலைகளையும்
அசையாதே என்கின்றன மரங்கள்.
ஊஞ்சல் நிலைக்கு வரவில்லை.
மனிதர்கள் சிலையாகின்றனர்..
ஒரு துளிதான் எனினும்
அதில் ஒரு படகினைப் போல
மெது மெதுவாக
மூழ்கத்தொடங்குகிறது பூங்கா.
இப்போதும் எனக்குத் தெரியவில்லை
எனக்கு ஏன் தரப்பட்டுவிடுகிறது
கண்ணீரை வாரி
படகுக்கு வெளியே ஊற்றும் பொறுப்பு?
Comments
Post a Comment