இந்த பூமியில் முக்கியத்துவம் வாய்ந்ததென்று ஏதும் உள்ளதா - டேனியல் கார்ம்ஸ்
Artist: Picasso |
“இந்த பூமியில் மட்டுமின்றி வேற்று உலகங்களின் நிகழ்வுப்போக்குகளையே கூட மாற்றும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்று பூமியில் ஏதும் இருக்கிறதா?” என
நான் என் ஆசிரியரிடம் கேட்டேன்.
"உள்ளது" என்று அவர் பதிலுரைத்தார்.
நான் கேட்டேன் "அப்படியானால் அது என்ன?"
"அது.." என ஏதோ சொல்ல வந்தவர் திடீரென மெளனமானார்.
நான் நின்றபடியே அவருடைய பதிலுக்காக ஆர்வத்துடன் காத்திருந்தேன்.
ஆனால் அவரோ எதுவும் சொல்லவில்லை.
நானும் ஒன்றும் சொல்லாமல் நின்றுகொண்டிருந்தேன்.
அவரும் ஒன்றும் சொல்லவில்லை.
நானும் ஒன்றும் சொல்லாமல் நின்றுகொண்டிருந்தேன்.
அவரும் ஒன்றும் சொல்லவில்லை.
நாங்கள் இருவரும் ஒன்றும் சொல்லிக்கொள்ளாமல் அங்கேயே நின்றுகொண்டிருந்தோம்.
ஹோ-லா-லா!
நாங்கள் இருவரும் ஒன்றும் சொல்லிக்கொள்ளாமல் அங்கேயே நின்றுகொண்டிருந்தோம்!
ஹோ-லெ-லே!
ஆமாம், ஆமாம், நாங்கள் இருவரும் ஒன்றும் சொல்லிக்கொள்ளாமல் அங்கேயே நின்றுகொண்டிருந்தோம்!

ஜென் கதை போல இருக்கிறது. சிறப்பு 👍👍
ReplyDeleteஒன்றுமில்லை, என்பதுதான் அந்த ஒன்று.
ReplyDeleteகவிதை விஷயத்தில் அல்ல சொல்லப்படும் முறைமையில்தான் உள்ளது என்பது மீண்டும் நிரூபனமாகிறது.
ReplyDeleteஅப்படி ஒன்று இருக்குமா?
ReplyDelete