சந்திப்பு
Artist: John Miller |
கல் சிங்கங்கள் கவனிக்கக் கடற்கரையில் இருக்கிறேன்
என்னையே அறியாமல்
எண்ணற்ற வேறுவேறு கடற்கரைகளில் இருப்பது போலிருக்கிறது
வேறெங்கேயோ புகைக்கிறேன்
அதன் கிறுகிறுப்பு இங்கு என்னில் ததும்புகிறது
வேறெங்கேயோ மண்ணை உருட்டி எறிகிறேன்
அதன் சப்தம் இங்கு எனக்குக் கேட்கிறது
தெரியவில்லை
இன்னும் கொஞ்சநேரத்தில்
நான் இங்கிருந்து எழுந்து செல்வேனா
அல்லது வேறெங்கிருந்தோ எழுந்து செல்வேனா
**