நிழலாகயிருப்பது நன்று நிழலாகக் கூட இல்லாமலிருப்பது அதனினும் நன்று

Artist: Liu Guosong

என்னுடையது அதோ அந்த ஒரு நிழல் மட்டுமே

மற்றபடி இச்சுவர் ஏந்தியிருக்கும்

இருக்கைகளின் நிழல்களோ

அதிலொன்றில்

கன்னத்தில் கைவைத்தபடி அமர்ந்திருக்கும் நிழலுருவமோ

என்னுடையதில்லை

என்னுடையது இல்லவே இல்லை

எவருடைய சாயையாகக் கூட இருக்கட்டுமே

எனக்குப் பிரச்சனையும் இல்லை

அந்நிழலுக்குப் பக்கத்தில்

ஒரு நிழல் போல அமர்கிறேன்

அனைத்தும் குணமாகிவிட்டதைப் போலிருக்கிறது

**