மாபெரும் அஸ்தமனம்


Artist: Ryo Takemasa

அந்திவானில் மகத்தான ரத்தத்துளி
அதன் ஒளிப்பரிவாரங்களோடு அஸ்தமனமாகிக் கொண்டிருக்கிறது
அனிச்சையாக என்னை நான் தொட்டுப்பார்க்கிறேன்
ஆ! காற்றைத் தீண்டுவது போல அல்லவா உள்ளது
தொடுகையுமில்லை தொடப்படுவதுமில்லை
வேறெதுவோ நான்..
ஒரு வீட்டில் வசிப்பவனை மாதிரி
எனக்குள் இருக்க வேண்டிய நான் எங்கே
ஒருவேளை வீட்டை இழுத்துச் சார்த்திவிட்டு
வெளியே சென்றுவிட்டதா என்னுடைய நான்
இல்லை அஸ்தமனத்தின் மறுபக்கத்தை
வேறொரு கடற்கரையிலிருந்து பார்த்துக்கொண்டிருக்கிறதா
என்னுடைய நானே திரும்பி வராதே..
நீ இப்போது எங்கிருக்கிறாயோ அங்கேயே இரு
அதுவே உன் சுவர்க்கம்..

00