|
Artist: Andrew Wyeth |
இருப்பிலிந்து இன்மைக்குச் செல்ல
உன் பார்வையால்
ஒரு ஏணி செய்திருக்கிறேன்
அந்த ஏணியிலேறி இன்று இன்மைக்குள் போனேன்
இன்மைக்குள்ளிருந்தபடி இருப்பைப் பார்க்கும்போது
உன் பின்னங்கழுத்தின் நிழல் ஒரு மரமாகி நிற்பதை
காணமுடிகிறது
கிளைகளில் இலைகளென எண்ணற்ற வளையல்துண்டுகள்
*