உண்மை என்பது எண்ணத்தின் தொன்மம்




1
தெளிவு குருடாக்கும்


2
குழந்தையைச் சுமப்பது போல் வாழ்வை ஏந்திக்கொள்.


3
நாட்டம் எல்லைக்குட்படுத்தும்.


4
உண்மை என்பது எண்ணத்தின் தொன்மம்.


5
உண்மை வலியுறுத்தாது


6
எங்கே சாத்தியம் முடிகிறதோ, அங்கிருந்து கடந்த காலம் தொடங்குகிறது .


7
ஒருவேளை வாழ்க்கை தாங்கக்கூடியதாக இருக்குமென்றால், மரணமென்ற ஒன்று இருந்திருக்காது.


8
ஒருபோதும், நாம் கடந்த காலத்திற்குள் நுழையவோ அல்லது எதிர்காலத்தைவிட்டு வெளியேறவோ கூடாது.


9
தோல்வி ஒரு முதல் வரைவு ஆகும். எந்த நோக்கமும் முதல் வரைவுக்குத் தேவையில்லை.


10
எது முதலில் வந்தது? வீழ்ச்சியா பாதாளமா?


11
நெருப்புடன் விளையாடுவது நெருப்புக்கு ஆபத்தானது


12
வாழ்வு தன் அர்த்தத்தை இழக்கும்போது எஞ்சியிருப்பது எதுவோ அதுவே வாழ்வின் அர்த்தம்


13
எந்த உள்ளடக்கமும் இல்லாததால் அவர்கள் வடிவத்தைத் தேடுகிறார்கள். அதுதான் அவர்களைத் திருப்தியற்றவர்களாக மாற்றுகிறது.


14
பரிசோதனைக்குரிய விஷயங்களுடன் காதலிலிருப்பது காதல் அல்ல. காதல் வசப்பட்டுள்ள விஷயங்களுடன் பரிசோதனையில் ஈடுபடுவது பரிசோதனை அல்ல.


15
பிரக்ஞையே ஆன்மாவின் வியாதி.




000


ராபர்ட் கேல் (1968-) ஸ்லோவாக்கியாவின் பிராடிஸ்லாவா நகரில் பிறந்தவர். Naked thoughts, On wing, Signs & Symptoms போன்ற தத்துவத் துண்டுப்பிரதிகளை எழுதியுள்ளார்.