அருண யாமம்
என்ன பறவையென்று தெரியவில்லை
சாயும்காலத்திலிருந்து அப்படியே உட்கார்ந்திருக்கிறது
வானத்தை மறந்துவிட்டதா
இல்லை தானொரு பறவையென்பதையே மறந்துவிட்டதா
நள்ளென்ற யாமத்தில் மனது கேட்கவில்லை
மொட்டைமாடிக்குச் சென்றேன்
அப்போதுகூட அது
பறவைநிலைக்குத் திரும்பியிருக்கவில்லை
நெருங்கிச் சென்று
மெல்லக் கையில் தூக்கிப் பறக்கவிட்டேன்
பறக்கப் பறக்க மீண்டும்
அதேயிடத்திற்கே
வந்துகொண்டிருந்தது அந்தப் பறவை
நானும் நிறுத்த வில்லை
*
Comments
Post a Comment