ஆக்டோவியா பாஸ் கவிதைகள்-2
Artist: Nadean OBrien |
1. ஒளியினூடாக நடத்தல்
நீ உன் இடது அடியெடுத்து முன்னால் வைக்கிறாய்
பகல் நின்று சிரிக்கிறது
சூரியன் அசையாது நிற்கும்போது
மெதுவாக அடியெடுத்து வைக்கிறது
நீ உன் வலது அடியெடுத்து முன்னால் வைக்கிறாய்
மரங்களில் அசையாது நிற்கும் பகலினூடாக
சூரியன் மெதுவாக உலாவருகிறது
மார்பகங்களை நிமிர்த்தியபடி நீ சஞ்சரிக்கிறாய்
மரங்கள் நடக்கின்றன
சூரியன் பின்தொடர்கிறது
பகல் உன்னைச் சந்திக்கப்புறப்படுகிறது
வானம் உண்டாக்குகிறது திடீர் முகில்களை
**
2. உட்புறம்
போர் புரிகிற எண்ணங்கள்
என் தலையைப் பிளக்கப் பார்க்கின்றன.
இந்த எழுத்துக்கள்
பறவைகளின் தெருக்களினூடாக
நகர்கின்றன
என்னுடைய கை சப்தமாக
சிந்திக்கிறது
ஒரு சொல் இன்னொரு சொல்லை
அழைக்கிறது.
நான் எழுதும் இந்தப் பக்கத்தில்
வந்து போகும் ஜீவராசிகளை
பார்க்கிறேன்
இந்தப் புத்தகமும் நோட்டுப்புத்தகமும்
தத்தம் இறக்கைகளை விரித்தபடி
ஓய்வெடுக்கின்றன
விளக்குகள் ஒளிர்ந்துகொண்டிருக்கின்றன
நாழிகை ஒரு படுக்கையைப் போல
திறந்து மூடுகிறது
சிவப்பு காலுறைகளுடனும்
ஒரு வெளிறிய முகத்துடனும்
நீயும் இரவும் உள்ளே வருகிறீர்கள்
**
3.குறுக்கே
*
பகலின் பக்கத்தைப் புரட்டுகிறேன்
உன் இமை முடியின் அசைவுகள்
எமக்குச் சொல்பவற்றை எழுதியவாறு
*
நான் நுழைகிறேன் உன்னுள்,
இருளின் நேர்மையுடன்.
எமக்கு வேண்டும் இருளின் சாட்சிகள்,
எமக்கு வேண்டும் குடிப்பதற்கு கருப்பு ஒயின்:
எடுத்துக்கொள் என் கண்களை
கசக்கிப் பிழி அவற்றை
*
இரவின் ஒரு சொட்டு
உன் முலைக்காம்பின் மேல்:
சதைவர்ணத்தின் ரகசியங்கள்.
*
என் விழிகளை மூடிக்கொள்கிறேன்
பின்பு அவற்றைத் திறக்கிறேன் உன் விழிகளுக்குள்
*
எப்பொழுதும் விழித்திருக்கிறது
தன் கோமேதகப் படுக்கையின் மீது:
உன் ஈர நாக்கு
*
நீருற்றுக்கள் உள்ளன
உன் ரத்த நாளங்களின் தோட்டங்களில்
*
உதிர முகமூடியுடன்
வெற்றுணர்வோடு உன் எண்ணங்களைக் கடக்கிறேன்:
நினைவிழப்பு எம்மை வழிநடத்துகிறது
வாழ்வின் மறுபக்கத்திற்கு.
3.குறுக்கே
*
பகலின் பக்கத்தைப் புரட்டுகிறேன்
உன் இமை முடியின் அசைவுகள்
எமக்குச் சொல்பவற்றை எழுதியவாறு
*
நான் நுழைகிறேன் உன்னுள்,
இருளின் நேர்மையுடன்.
எமக்கு வேண்டும் இருளின் சாட்சிகள்,
எமக்கு வேண்டும் குடிப்பதற்கு கருப்பு ஒயின்:
எடுத்துக்கொள் என் கண்களை
கசக்கிப் பிழி அவற்றை
*
இரவின் ஒரு சொட்டு
உன் முலைக்காம்பின் மேல்:
சதைவர்ணத்தின் ரகசியங்கள்.
*
என் விழிகளை மூடிக்கொள்கிறேன்
பின்பு அவற்றைத் திறக்கிறேன் உன் விழிகளுக்குள்
*
எப்பொழுதும் விழித்திருக்கிறது
தன் கோமேதகப் படுக்கையின் மீது:
உன் ஈர நாக்கு
*
நீருற்றுக்கள் உள்ளன
உன் ரத்த நாளங்களின் தோட்டங்களில்
*
உதிர முகமூடியுடன்
வெற்றுணர்வோடு உன் எண்ணங்களைக் கடக்கிறேன்:
நினைவிழப்பு எம்மை வழிநடத்துகிறது
வாழ்வின் மறுபக்கத்திற்கு.
**
மேற்கண்ட கவிதைகள் Poem of Octavio Paz: Edited and translated by Eliot Weinberger நூலில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவை.
மேற்கண்ட கவிதைகள் Poem of Octavio Paz: Edited and translated by Eliot Weinberger நூலில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவை.