குவார்ட்ஸ் கூழாங்கல்லின் கனவு - வாஸ்கோ போப்பா
Artist: Rene Magrrite |
பூமிக்குள்ளிருந்து ஒரு கை தோன்றியது
கூழாங்கல்லைக் காற்றில் எறிந்தது
எங்கே அந்தக் கூழாங்கல்
அது மீண்டும் பூமிக்குத் திரும்பவில்லை
சொர்க்கத்திற்கும் ஏறிப் போகவில்லை
அந்தக் கூழாங்கல்லுக்கு என்னவாயிற்று
உயரங்கள் அதை விழுங்கிவிட்டனவா
அல்லது பறவையாய் மாறிவிட்டதா
இதோ இருக்கிறது அந்தக் கூழாங்கல்
பிடிவாதத்துடன் அது தனக்குள்ளே தங்கிவிட்டது
சொர்க்கத்தினுள்ளும் அல்ல பூமியினுள்ளும் அல்ல
அது தனக்கே கீழ்ப்படிகிறது
உலகங்கள் பலவற்றிலும் ஓர் உலகம்