இரண்டு புகைப்படங்கள்
1
ஏக்கத்தையும் ஞாபகத்தையும்
காலம்காலமாகத் தின்றுவாழும்
ஒரு புகைப்படத்தை இன்று பார்த்தேன்
என்னையும் அழச்சொல்லி
விழி சிவக்க அழுதுகொண்டிருந்தது
2
கனவிற்குள் கிடக்கிறது என் தொலைந்துபோன முகத்தின் புகைப்படம்
கனவிற்கு வெளியே கொண்டுவர
இந்தப்பக்கமாக அதை இழுக்கிறேன்
பதிலுக்குக் கயிறிழுக்கும் போட்டியின் கயிறென
அதை யாரோ அந்தப்பக்கமாக இழுக்கிறார்கள்
**

Comments
Post a Comment