மரங்கள்- பிரான்ஸ் காஃப்கா
Artist: Adolfo Wildt |
நாம் பனியிலிருக்கும் அடிமரம் போலயிருக்கிறோம். தோற்றத்தில் அவை பட்டிழைவாக கிடந்தபடியும் ஒரு மெல்லிய உந்துதலே அவற்றை உருளச்செய்ய போதுமானதாகவும் இருக்கின்றன. இல்லை, அப்படிச் செய்ய முடியாது, ஏனென்றால் அவை உறுதியாகத் தரையுடன் இணைபிரிக்க முடியாதபடியிருக்கின்றன. ஆனால் பாருங்கள், அது கூட ஒரு தோற்றம் மட்டுமே.
•••
மேற்கண்ட உருவகப் பகுதி The Complete Stories of Franz Kafka (Edited by Nahum N. Glatzer)-ல் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டது.