ரைசார்ட் காபுசின்ஸ்கி கவிதைகள்


Artist: Pawel Kuczynski


1. நான் கற்களை எழுதினேன்


நான் கற்களை எழுதினேன்
நான் வீட்டை எழுதினேன்
நான் நகரத்தை எழுதினேன்

நான் கற்களை உடைத்தேன்
நான் வீட்டை நொறுக்கினேன்
நான் நகரத்தை முழுவதும் அழித்தேன்

அந்தக் காகித பக்கம்
உருவாக்கத்திற்கும் அழிவாக்கத்திற்கும்
இடையேயான
போராட்டத் தடத்தைத் தாங்கியிருந்தது

                                 
2.கண்டுபிடிப்புக்கள்


வலி உங்கள் இதயத்தை நொறுக்கியது:
நீங்கள் உங்களது இதயத்தை உணர தொடங்கினீர்கள்

உங்கள் கண்கள் திடுமெனக் குருடாக மாறியது:
நீங்கள் உங்களது கண்களை உணர தொடங்கினீர்கள்

உங்கள் நினைவு இருளின் வெள்ளத்தில் மூழ்குகிறது:
நீங்கள் உங்களது நினைவை உணர தொடங்கினீர்கள்

நீங்கள் உங்களைக் கண்டறிந்தீர்கள்
தன்னை மறுப்பதன் வழியே

நீங்கள் நிலைத்திருக்கிறீர்கள்
தன்னிருப்பை மறுப்பதன் வழியே


                                      
ரைசார்ட் காபுசின்ஸ்கி (1932-2007)

போலாந்தை சேர்ந்த புகழ்பெற்ற பத்திரிக்கையாளர் மற்றும் கவிஞர். I Wrote Stone: The Selected Poetry of Ryszard Kapuściński எனும் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் அடங்கிய நூல் வெளியாகியுள்ளது.


நன்றி: கல்குதிரை

Comments