சுவர்கள்- கான்ஸ்டான்டின் கவாஃபி

Artist:

Alberto Savinio



முன்யோசனையின்றியும் இரக்கமின்றியும் வெட்கமின்றியும்

அவர்கள் என்னைச் சுற்றி இந்த உயரமான தடித்த சுவர்களை எழுப்பியுள்ளனர்.

இப்போது நானிங்கே நிராசையில் உட்கார்ந்திருக்கிறேன்.

இந்த விதி வேறெதைக் குறித்தும் சிந்திக்கவிடாமல்
என் மனதைச் சித்திரவதை செய்கிறது—

ஏனெனில் நான் செய்து முடிக்க வெளியே அவ்வளவு விஷயங்கள் இருந்தன.

அவர்கள் சுவரெழுப்பிக் கொண்டிருக்கையில் நான் ஏன் கவனிக்கவில்லை?

ஆனால் எந்த சப்தமுமில்லை, கட்டுபவர்களின் சப்தம் கூட எனக்குக் கேட்கவில்லை.

புலப்படாதவகையில் அவர்கள் என்னை
இவ்வுலகத்திலிருந்து ஒதுக்கிவைத்துவிட்டார்கள்.

*

Comments